தமிழகத்தில் மழை தொடரும்

சென்னை: குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, காங்கேயத்தில் 110 மிமீ மழை பெய்துள்ளது. கொடுமுடி 100 மிமீ, பவானி கொடைக்கானல் 90 மிமீ, அவினாசி 80 மிமீ, போடி, குமாரபாளையம், சென்னை வில்லிவாக்கம் 70 மிமீ, பள்ளிப்பட்டு 60 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், சில இடங்களில் நேற்று இடியுடன் மழை பெய்தது. இதுதவிர கேரளா முதல் உள் கர்நாடகா வரை  வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. அதனால் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 17ம் தேதி தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

Related Stories: