மடத்துக்குளம் நால்ரோட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு

உடுமலை, ஏப். 14: மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிமுக சார்பில் நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கோடைகாலத்தில் நீர் மோர் பந்தல் திறந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் படி  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்பேரில் பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யும், மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரும் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் தலைமையில் நேற்று மடத்துக்குளம் நால் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர் மோருடன் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் தர்பூசணி, எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் பேரூர் கழக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: