×

குடியிருப்புகளுக்கே சென்று தடுப்பூசி சிறப்பு முகாம்

சேலம், ஏப். 12: சேலம் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிக்கே சென்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சேலம் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதிக அளவில் பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி, அம்மாப்பேட்டை செல்வநகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் முகாமிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாநகர பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு, பொதுத்துறை அலுவலகங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 100 நபர்களுக்கு மேல் இருப்பின் அங்கேயே சென்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ள சேலம் மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு மருத்துவ அலுவலர் ஜோசப்பின் 75981 30884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து கொள்ளலாம், என்றார். இதில், மாநகர நல அலுவலர் பார்த்தீபன், உதவி கமிஷனர்கள் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் உட்பட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் உணவக வளாகத்தில் தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 150 பேருக்கும், குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வங்கி அலுவலர்கள் மற்றும் நரசுஸ் காபி ஊழியர்கள் 450 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை