மக்கள் கோரிக்கை பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கோரி வழக்கு கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, ஏப். 10: பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் ெகாரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் மனு செய்யலாம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த அழகப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொன்னமராவதி தாலுகா ஆலவயல் கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் பங்குனி மாதம் பழத்திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்.9ல்(நேற்று) நடக்கும். அப்போது மதியம் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது வழக்கம்.

ஜல்லிகட்டு நடத்த ேபாலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘கொரோனா பாதிப்பால் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு மனுதாரர் மீண்டும் மனு செய்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: