திருமங்கலம், மார்ச் 30: திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேற்று டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சிலைமலைப்பட்டி, பாப்புரெட்டிபட்டி, சொக்கலிங்காபுரம், பொக்கலாப்பட்டி, ராமநாதபுரம், எம்.சுப்புலாபுரம், எம்.செங்குளம், சிலார்பட்டி, கே.சத்திரபட்டி, கிளாங்குளம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வீடு தோறும் 6 காஸ் சிலிண்டர்கள், வாசிங்மெசின் இலவசம், வீட்டிற்கே ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.