காரைக்காலில் பெண் தூக்கிட்டு தற்கொலை

காரைக்கால், மார்ச் 25: காரைக்கால் திரெளபதியம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் பாலகணேசன். இவரது மனைவி நளினி (49). கடந்த சில மாதங்களாக தூக்கமின்றி மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (23ம் தேதி) மாலை வீட்டுக் கூரையில் கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் அளித்த புகாரின்பேரில் நகர காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: