அய்யர்மலை மகாமாரியம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை, மார்ச் 24: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலை மகா மாரியம்மன் கோயிலில் கடந்த 21ம் தேதி காலை கடம்பன் துறையிலிருந்து பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, திங்கட்கிழமை காலை மாவிளக்கு, அக்னிச்சட்டி மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூக்கு தேர் அலங்காரம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பூக்குழி இறங்குதல் அதன்பின் வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று காலை தூக்குத் தேர் புறப்பாடு நடைபெற்று முக்கிய திருவீதி வழியாக வலம் வந்து மாலை திருத்தேர் குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கம்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: