மதுபானங்கள் பதுக்கல், கடத்தல் விற்பனையை தடுக்க சிறப்பு குழு: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மதுபானங்களை முறைகேடாக பதுக்குதல், கடத்தல் மற்றும் விற்பனையை  தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ெவளியிட்ட அறிக்கை: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக சென்னையில் மதுபானங்களை பதுக்குதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க கண்காணிக்கும் பொருட்டு, நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்டம் வாரியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை அலுவலர்கள் மற்றும் கலால் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நியமிக்கப்பட்ட சிறப்பு குழு, அந்தந்த மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டும், டாஸ்மாக் சட்ட அமலாக்கப்பிரிவு அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டும், அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மதுக்கூடங்கள் செயல்படுவதை கண்காணிக்கும் பொருட்டும், மதுபான சில்லறை விற்பனை கடைகள் பதிவேட்டினை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் பொருட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல் அமலாக்கப்பிரிவு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை காவலர் (தெற்கு) 9498181663, மகேந்திரபிரபு தலைமை காவலர் (வடக்கு) 9498133012, ராமகிருஷ்ணன் தலைமை காவலர் (கிழக்கு) 7904631637, மாதவன் வட்ட கலால் அலுவலர் 9025768637 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்டவிரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு குழு அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: