வட்டு எறிதலில் அசத்திய பிஎச்டி ஸ்காலர் சீமா கலிரம்னா

காமன்வெல்த் தடகளம் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை சீமா கலிரம்னா 58.65 மீட்டர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் (61.66 மீ.) தங்கப் பதக்கமும், கனடாவின் ஜூலியா டுங்க்ஸ் (60.67 மீ.) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சவுதாரி பன்சிலால் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சிக் கல்வியில் பிஎச்டி முடித்துள்ள சீமா கலிரம்னா (அரியானா), மகன் ருத்ரா பிறந்து 11 மாதம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கி சாதித்துள்ளார்.

2025 தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்திய சீமா, காமன்வெல்த் பதக்கத்தை தனது கணவர் மற்றும் பயிற்சியாளரான ரவீந்தருக்கு சமர்ப்பித்துள்ளார். சீமாவின் தந்தையும் இந்திய ராணுவ அணியின் கூடைப்பந்து மற்றும் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஆவார். அவர் தான் சீமாவை இளம் வயதிலேயே விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்துள்ளார்.

Related Stories: