இந்திய அணி முன்னாள் கேப்டன் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா (39) தற்போது லண்டனில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக உள்ள ரோகித், உடல்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் நட்சத்திர வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியுடன் உள்ள புகைப்படத்தை ரோகித் நேற்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரோகித் 10 வயது குறைந்து 29 வயது இளைஞரைப் போல காட்சியளிப்பது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
