×

மின்கட்டண உயர்வு என வதந்தி; வெயில் காலத்தில் அதிகளவு AC பயன்படுத்துவதால் கட்டணம் உயா்கிறது: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சென்னை: மின்கட்டணம் அதிகரித்து வந்தது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான். 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு 3 மடங்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின்கட்டண உயர்வு என வதந்தி பரவுகிறது, வெயில் காலத்தில் அதிகளவு AC பயன்படுத்துவதால் கட்டணம் உயா்கிறது

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது; மின் பயன்பாடு அதிகாிக்கும் போது மின்கட்டணம் அதிகாிக்க தான் செய்யும். மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; காவிரி பிரச்சனையில் முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார். காவிரி பிரச்சனையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார். மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.

முதலமைச்சர் கர்நாடகா செல்வாரா என்ற கேள்விக்கு அவரே அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்தார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Chennai ,Chennai General Secretariat ,
× RELATED காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப...