×

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஜெயகுமார், மரகதம் குமரவேல், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

இதன் காரணமாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடைகோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி வழக்கு தொடர்ந்தார். தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Trichy East ,Karur ,Viralimalai ,Perudura ,Ambasamutram ,Chennai High Court ,Election Commission ,
× RELATED காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக...