×

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

அதே போல பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்க கூடாது என்றும் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது. முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த வழக்கில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Senthil Balaji ,Anti-Bribery Department ,Delhi ,Tasmak ,Bribery Department ,TASMAC ,
× RELATED விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு...