சில்லி பாயின்ட்…

 

* ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்குக்கு பதிலாக அல்பி மார்கெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஆசிய தகுதிச் சுற்றில் வென்ற யுஏஇ மகளிர் அணி யு19 உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

* இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் ஜோ ரூட் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்துக்கு முன்பாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் அடுத்த மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு மட்டும் இடைக்கால ஏற்பாடாக மார்கஸ் டிரெஸ்கோதிக் பயிற்சியாளராக செயல்படுவார்.

* இந்திய ஹாக்கி அணியின் சீருடை நிறம் நீலத்தில் இருந்து காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நீல நிற செயற்கை மைதானத்தில் வீரர்களின் சீருடை பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த நிற மாற்றம் என ஹாக்கி இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்திய வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வா பிரபு இருவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: