உகாண்டா சர்வாதிகாரி இடி அமீன் பேரன் தகுதிநீக்கம்

 

ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் முன்னாள் அதிபர் இடி அமின். மோசமான சர்வாதிகாரியாகப் பெயர் பெற்ற இவரது பேரன் அசிஸ் அப்துல், ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் (90+ கிலோ) பங்கேற்றார்.

’ஸ்காட்லாந்தின் மன்னர்’ என தன்னைப் பிரகடனப்படுத்தி இடி அமின் இங்கிலாந்தை வெறுப்பேற்றிய நிலையில், ’ஸ்காட்லாந்தின் புதிய மன்னர்’ என்பதே தனது கனவு என அறிவித்துவிட்டு கிளாஸ்கோ வந்திருந்த அசிஸ் அப்துல் காலிறுதியில் இங்கிலாந்தின் டாமர் தாமஸ் உடன் மோதினார். முதல் சுற்றில் அசிஸ் தனது ஆக்ரோஷமான பஞ்ச்களால் தாமசை திணறடித்தாலும், தாமசின் உயரம் அவருக்கு சாதகமாக இருந்தது.

தொடர்ந்து தவறிழைத்ததால் நடுவரால் எச்சரிக்கப்பட்ட அசிஸ் அப்துலுக்கு முதல் 2 சுற்றிலும் தலா 1 புள்ளி அபராதமாக குறைக்கப்பட்டது. மூன்றாவது சுற்றின் இடையே தாமசின் முகவாய் மீது தனது தலையால் மீண்டும் மீண்டும் முட்டியதை அடுத்து அப்துலை தகுதி நீக்கம் செய்த நடுவர் தாமஸ் வென்றதாக அறிவித்தார். அதே சமயம், செய்தியாளர்களிடம் பேசிய அப்துல், இந்த ரெஃப்ரீ ரொம்ப மோசம். அவரது முடிவுகள் எதுவுமே சரியில்லை. இங்கிலாந்து வீரர்கள் நிறைய தவறுகள் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

Related Stories: