×

ரயில் டிக்கெட் கேன்சல் கட்டணம் எவ்வளவு?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் டிக்கெட் கேன்சல் கட்டணம் அளித்த எழுத்துப்பூர்வ பதில்:

* ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், ரத்து கட்டணங்கள் பின்வருமாறு: முதல் வகுப்பு ஏசி/எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ. 240; இரண்டாம் வகுப்பு ஏசி/முதல் வகுப்புக்கு ரூ. 200; மூன்றாம் வகுப்பு ஏசி/ஏசி சேர் கார்/3ஏ எகானமி வகுப்புக்கு ரூ. 180; ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ. 120; மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்புக்கு ரூ. 60.

* ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையிலான இடைவெளியில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ரத்து கட்டணங்களுக்கு உட்பட்டு, பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் (திரும்ப வழங்கப்படாது).

* ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரையிலான இடைவெளியில் ரத்து செய்யப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணங்களுக்கு உட்பட்டு, பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஆனால், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், எந்தத் தொகையும் திரும்ப வழங்கப்படாது.

* காத்திருப்போர் பட்டியலில் உள்ள அல்லது பகுதியளவு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ரத்து செய்யலாம்; இதற்காக ரூ. 60 நிர்வாகக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

* வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரத்து கட்டணங்கள் மற்றும் கால வரம்புகள் மூன்று நிலைகள் உள்ளன. ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

* புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரையிலான இடைவெளியில் ரத்து செய்யப்பட்டால், கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்; ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் எந்தத் தொகையும் திரும்ப வழங்கப்படாது.

* புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஸ்லீப்பர் வகுப்பு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான குறைந்தபட்ச ரத்து கட்டணம் சில தூரங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவைகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அல்லது பகுதியளவு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரத்து கால வரம்பு அல்லது கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : NEW DELHI ,EU ,MINISTER ,ASWINI VAISHNAV ,
× RELATED காலியாக இருக்கும் 151 சூப்பர்...