திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான உதய்கிருஷ்ண ரெட்டி மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அட்டப்பூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். அதன்பேரில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ண ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நகர காவல் ஆணையர் சஜ்ஜனார் இந்த வழக்கின் விசாரணையை மகளிர் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றியதை அடுத்து சிறப்பு மகளிர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஒருங்கிணைந்த நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டியை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
