- NCPI
- பாஜக
- புது தில்லி
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மம்தா பானர்ஜி
- இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்பிக்கள் வெளியேறினர். அவர்கள் நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா (என்சிபிஐ) என்ற கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த என்டிஏ நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் முதல் முறையாக என்சிபிஐ கட்சியின் 20 எம்பிக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றது குறித்து என்சிபிஐ கட்சி எம்பி சயோனி கோஷ் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் முன்னிலையில் நடந்த இக்கூட்டம் பயனுள்ளதாகவும், தகவல் நிறைந்ததாகவும் இருந்தது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்தோம். இன்று விவாதிக்கப்பட உள்ள வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.
