உலக நுகர்வோர் உரிமை தினம்

காரைக்குடி, மார்ச் 17:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுமச்செயலியல் துறை சார்பில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாப்பட்டது. துறை தலைவர் வேதிராஜன் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை சமாளித்தல் இன்றைய மற்றும் வரவிருக்கு காலங்களில் இன்றியமையாத தேவையாகும். நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டு அவற்றை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.  தரத்தை எதிர்பார்ப்பது ஒரு நுகர்வோரின் உரிமை. சமூகத்திற்கு தரத்தை வழங்குவது உற்பத்தியாளர்களின் கடமை என்றார். மேலாண்மை புல முதன்மையர் செந்தில், இந்தியன் வங்கி பிள்ளையார்பட்டி கிளை மேலாளர் செல்வம், வழக்கறிஞர் லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: