நீடாமங்கலம், மார்ச் 15: நீடாமங்கலம் அருகே பொதக்குடி தமுமுக, மமக கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி தேர்தலுக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேர்தல் அதிகாரிகளாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ்கான், மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது கலந்துகொண்டனர். வாக்கு எண்ணிக்கையில் தமுமுக, மமக பொதக்குடி கிளை தலைவராக ஜப்பான் ஷாகுல் தேர்வு செய்யப்பட்டார்.