சென்னை: தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று பவுனுக்கு ரூ.560 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,840க்கு விற்பனையானது. தொடர்ந்து 25ம் தேதி கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,400க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,960க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
