மஞ்சூர் அரசு பள்ளியில் கலைத் திருவிழா துவக்கம்

 

மஞ்சூர், ஜூலை 27: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் மகாகவி பாரதியார் நினைவு நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நடப்பாண்டிற்கான கலைத் திருவிழா துவக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பாபி குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.  பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராணி, பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி தீபா, மக்கள் பிரதிநிதி ஷாம்ளா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  கலைத் திருவிழா பொறுப்பாசிரியர் சகாயதாஸ் வரவேற்றார்.

பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இளையோர் திறன் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கட்டுரை, ஓவியம், இசை, நாட்டியம், நாட்டுப்புற நாட்டியம், நாடகம் என பல்வேறு போட்டிகள் நடைபெறும். பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவிகள் வட்டார அளவிலும், தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவிகள் மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என தலைமை ஆசிரியர் பாபி தெரிவித்தார்.

 

Related Stories: