ஊட்டி,ஜூலை29: ஊட்டியில் உள்ள ஏடிசி நிழற்குடைகளில் தடையை மீறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பொது சுவர்கள் மற்றும் நிழற்குடைகள் போன்றவைகளில் அரசியல் மற்றும் தனியார் நிறுவன போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால், இதனை சில அரசியல் கட்சிகள் பின்பற்றுவதில்லை. தொடர்ந்து, அரசு சுவர்கள், பொது சுவர்கள் மற்றும் நகராட்சி சுவர்களில் போஸ்டர்களை ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.குறிப்பாக, தற்போது ஆளும் கட்சியினரின் போஸ்டர்கள் பல்வேறு சுவர்களிலும் காணப்படுகிறது.
