டெல்லி: நாங்கள் வலியுறுத்தும் 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே கூறி உள்ளார். போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத், வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்ததற்கும் எங்களது போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த போராட்டம் நாட்டின் இளைஞர்களுக்கானது, எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல. இந்த இயக்கம் பலவீனமடையாது என்றும் கூறினார்.
இந்த போரட்டம் சோனம் வாங்சுக் அல்லது திப்கே என்ற தனிநபர்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்தப் போராட்டம் தேசத்தின் இளைஞர்களுடையது. இந்தப் போராட்டத்திற்கு அரசு ஒரு தீர்வைக் காண விரும்பினால், அது தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மட்டுமே.”
சோனம் வாங்சுக்கை அரசு காவலில் வைத்திருந்ததாக நான் நினைக்கிறேன். ஜே.பி. நட்டாவால் அவரைச் சந்திக்க முடிந்தது, ஆனால் எந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களாலும் அவரைச் சந்திக்க முடியவில்லை. சோனம் சார் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”
