டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை என திருச்சி சிவா குற்றச்சாட்டு சாட்டியுள்ளார். டெல்லி போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கல்வி அமைச்சர் இதுவரை வாய்திறக்கவில்லை. நீட் மறுதேர்வே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது; ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். நீட் விவகாரத்தில் நீதிமன்றம் அமைப்போம் என்ற பிரதமரின் அறிவிப்பு நகைப்புக்குரியது.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரி வருகிறோம். மசோதாக்களையும் தாக்கல் செய்யவில்லை; ஆனால், டெல்லி பிரச்சனையையும் விவாதிக்க மறுக்கிறார்கள். நீட் தொடர்பாக விவாதத்திற்கு தயார் என ஒன்றிய அமைச்சர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத்தை மதித்து விவாதிக்கவும் பதிலளிக்கவும் பிரதமர் முன்வரவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
