மல்லசமுத்திரம், ஜூலை 23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மல்லசமுத்திரம் கிளையில், வாரம்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த ஏலத்தில், 1867 மூட்டை பருத்தியை கருமனூர், மதியம்பட்டி, மாமுண்டி, ஆத்துமேடு, பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், சுரபி ரகம் குவிண்டால் ரூ.8,211 முதல் ரூ.10,525 வரையும், பி.டி. ரகம் ரூ.7,211 முதல் ரூ.9,660 வரையும், கொட்டு பருத்தி ரூ.5,699 முதல் ரூ.6,509 வரையும் ஏலம் நடந்து. மொத்தம் ரூ.63.11 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. ஏலத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், அவிநாசி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த பருத்தி ஏலம் 29ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
