ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்

 

நாமக்கல், ஆக.1: நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், கணக்கெடுப்பாளர்களாக, மேற்பார்வையாளர்களாக ஈடுபட உள்ள அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கேரளாவில் வழங்கப்பட்டுள்ளது போல 20 அரை நாள் விடுப்பு அல்லது 10 முழு நாள் விடுப்பு, தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும். இந்தியாவின் 2027ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான மிக முக்கியமான தேசியப் பணியாகும்.

இப்பணி 2 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமான வீடு கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்குகிறது.  இப்பணியில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் தங்கள் வழக்கமான அலுவல் மற்றும் கற்பித்தல் பணிகளுடன் இணைந்து கூடுதல் பொறுப்பை ஏற்று பணியாற்ற உள்ளனர்.

Related Stories: