×

கடன் கட்டிய மகளிர் குழுக்கள் மீண்டும் கட்டுமாறு நோட்டீஸ்: வங்கி மீது புகார்

விருதுநகர், ஜூலை 21: வில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியில் 3 மகளிர் குழுக்கள் முறையாக கடன்களை திரும்ப செலுத்தாத காரணத்தைக்கூறி, கடன்களை கட்டி முடித்த மீதமுள்ள 7 குழுவினரிடம் பணத்தை கட்ட வேண்டும் என தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்பந்தம் செய்வதாக மகளிர் சுய உதவி குழுவினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவில், ‘‘வில்லிபுத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மம்சாபுரத்தில் 10 மகளிர் குழுக்களை இணைத்து சிகரம் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இக்குழுக்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2 கோடி கடனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழங்கியது. இதில் 7 மகளிர் குழுக்கள் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் பணத்தை முறையாக ரூ.60 லட்சத்து 30 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தியுள்ளோம்.

அதேநேரம் மீதமுள்ள 3 மகளிர் குழுக்கள் கடன்களை முறையாக செலுத்தவில்லையென கூறப்படுகிறது. அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.14 லட்சத்து 46,700ஐ ஏற்கனவே கடனை திரும்ப செலுத்திய 7 குழுக்களிடம் வசூலிக்க சம்பந்தப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Virudhunagar ,Villiputur Mamchapuram ,NCB ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...