×

போதைப்பொருட்கள் விற்ற 92 பேர் கைது

 

சென்னை, ஜூலை 28: சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை போதைப் பொருள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில், ரயில் மற்றும் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தி வந்து விற்பனை செய்ததாக தனித்தனியாக மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா வியாபாரிகள் உள்பட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 98 கிலோ கஞ்சா, 141 கிராம் மெத்தாம்பெட்டமின், 3,617 போதை மாத்திரைகள், 27.72 கிலோ கஞ்சா சாக்லேட்கள், 9 கிராம் ஓஜி வகை கஞ்சா, 75 கிராம் ஓபியம், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

Tags : CHENNAI ,AMALRAJ BALEVARU ,CHENNAI METROPOLITAN POLICE BORDER ,
× RELATED ராஜா அண்ணாமலைபுரத்தில் வளர்ப்பு நாய்...