×

பொது சிவில் சட்ட மசோதா மபி சட்டப்பேரவையில் தாக்கல்

 

போபால்: மத்தியப் பிரதேச அரசு சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. மபியில் ஐந்து நாட்கள் நடைபெறும் பருவமழைக் காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பா.ஜ அரசு பொது சிவில் சட்ட மசோதா, 2026ஐ ேநற்று தாக்கல் செய்தது. பொது சிவில் சட்ட மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறும் என்று சபாநாயகர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மபி முதல்வர் மோகன் யாதவ் முதல்வரான பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் பெருமளவிலான நிலங்களை வாங்கியதாக வெளியான செய்தியால் நேற்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையின் நடவடிக்கைகளை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

Tags : Madhya Pradesh Assembly ,Bhopal ,Madhya Pradesh government ,BJP government ,session ,Madhya Pradesh.… ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...