மதுரை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் 11ம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தபோது, ரீல்ஸ் எடுப்பதற்காக தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டு தவெகவினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். திறந்தவெளி அருங்காட்சியகம் அகழாய்வுதளத்தில் படம் எடுக்க, டிரோன் கேமரா பயன்படுத்த தடை உள்ளது. தடையை மீறி அமைச்சருடன் வந்த தவெகவினர் டிரோன் கேமரா பயன்படுத்தி படம் பிடித்ததால் சர்ச்சை. மதுரை மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள சமணர் படுகையில், தமிழி எழுத்துகளை படுத்து பார்வையிட்டு அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.
