×

சில்லி பாயின்ட்…

 

* அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதியின்போது இங்கிலாந்து நட்சத்திரம் பெல்லிங்காம் மெஸ்ஸி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த போட்டியில் அர்ஜென்டினா வீ ரர்கள் பல முறை முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெஸ்ஸியிடம் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் ஒரு ஃபவுல் குறித்து சாதாரணமாக விவாதித்ததாகவும் கூறியுள்ள பெல்லிங்காம், மெஸ்ஸியுடன் விளையாடியது மிகப் பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

* உலக கோப்பை பைனலை பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய் தனது வீட்டில் இருந்தே பார்க்க உள்ளார். ‘நடப்பு தொடரில் அர்ஜென்டினா விளையாடிய 7 போட்டியையும் வீட்டில் இருந்துதான் பார்த்தேன். அனைத்திலும் நாங்கள் வெற்றி பெற்றோம். அதனால் பைனலுக்கும் அது தொடரும். நான் அணியும் கனமான ஜாக்கெட்டை கூட மாற்றப்போவதில்லை’ என்கிறார் ஜேவியர்.

Tags : England ,Bellingham ,Messi ,Argentina ,
× RELATED நியூயார்க்கில் இன்று பைனல் மோதல்: கோப்பையை தக்கவைக்குமா அர்ஜென்டினா..?