×

ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் சிந்து

 

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் சிந்து மோத இருந்த நிலையில், காயம் காரணமாக ஓகுஹரா நேற்று விலகினார். இதைத் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து, அதில் 4வது ரேங்க் வீராங்கனை சென் யூபெய் (சீனா) சவாலை சந்திக்கிறார். இருவரும் ஏற்கனவே 14 முறை மோதியுள்ளதில் யூபெய் 8-6 என முன்னிலை வகிக்கிறார்.

Tags : Japan Open ,Sindhu ,Tokyo ,India ,Japan ,Nazomi Okuhara ,Okuhara ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!