தஞ்சாவூர், ஜூலை 15: நாஞ்சிக்கோட்டை இ.பி.காலனி, ஆரோக்கிய நகரில் நிலவும் குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் நலசங்க நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் கோட்ட மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மூத்த குடிமக்கள் நலச்சங்க நிறுவனர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை இ.பி.காலனி மற்றும் ஆரோக்கியநகர் 1 முதல் 6 வரையிலான தெருக்களில் இரவு 9 மணிக்கு மேல் குறைந்த மின்அழுத்த விநியோகத்தால் மின்விசிறிகள், குளிர் சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இயங்குவதில்லை. அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விடுகிறது. இதனை உடனடியாக சரி செய்து சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
