ஆழியூர் கிளை இந்திய கம்யூ. கிளை கூட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 15: நாகப்பட்டினம் அருகே ஆழியூர் கிளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் நடந்தது. ஜெயபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் சுந்தரம், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் பேசினர். டில்லியில் ஒன்றிய அரசை எதிர்த்து நடைபெறும் பேரணி விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Related Stories: