சீர்காழி மகளிர் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம்

சீர்காழி, ஜூலை 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தலைமை இடத்து துணை தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார்.

சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம் 2027 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடு கணக்கெடுப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.விழாவில் தேர்தல் துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் மாதவன், இளநிலை உதவியாளர் அருண்பாண்டி, ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி, லயன்ஸ் சக்தி வீரன், கல்வித்துறை சேர்ந்த அகோரமூர்த்தி சபரிகிரிவாசன், மணிராஜ் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: