×

ஆனி மாத கடைசி நாளான நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லை ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு மாதத்தின் கடைசி நாளான 16ம் தேதி (நாளை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, 16ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Aani ,Chennai ,Tamil Nadu Registration Department ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு தினமும்...