குட்கா விற்ற 105 பேர் கைது

 

சென்னை, ஜூலை 15: சென்னை மாநகர காவல் எல்லையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் வியாபாரிகள் மீது போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் ேததி வரையிலான 7 நாட்களில், சென்னை காவல்துறையில் உள்ள 105 காவல் நிலைய எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பதுக்கி விற்பனை செய்ததாக தனித்தனியாக மொத்தம் 102 வழக்குகள் பதிவு செய்து வியாபாரிகள் உட்பட 105 பேரை போலீசார் கைது ெசய்தனர்.

அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட 435 கிலோ குட்கா, மாவா ெபாருட்கள், 3 பைக்குகுள், 2 ஆட்டோக்கள், ஒரு இலகு ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related Stories: