மகனுடன் ஸ்கூட்டரில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் லாரி மோதி பலி

 

சென்னை, ஜூலை 6: கீழ்ப்பாக்கம் பகுதியில் மகனுடன் ஸ்கூட்டரில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண், பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். திருவொற்றியூர் காலடிப்பட்டு 3வது தெருவை சேர்ந்தவர் சைரா பானு(50). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மகன் முகமது ஆசிப்(21) உடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஈகா நோக்கி செல்லும் போது, ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து இருந்த சைரா பானு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த சிமென்ட் கலவை இயந்திர லாரி எதிர்பாராத விதமாக சைரா பானு மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தனது மகன் கண் முன்பே தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரான மத்தியபிரதேச மாநிலம் மடாய் பகுதியை சேர்நத் ஓம் பிரகாஷ் சிங்(32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: