நாகர்கோவில் மையப்பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் மையப்பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நாகர்கோவில் மையப்பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இன்று (ஜூலை 14) அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி எரியத் தொடங்கியதால், அப்பகுதி முழுவதும் கடுமையான புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் புகைமூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகரின் மையப்பகுதியில் இந்த குப்பை கிடங்கு அமைந்துள்ளதால், இதனை உடனடியாக நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் இந்த குப்பை கிடங்கை இதுவரை இடமாற்றம் செய்யவில்லை.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான தீ விபத்து மற்றும் அதனால் எழும் நச்சுப் புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளை பூட்டிவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

Related Stories: