கத்தார் முன்னாள் மன்னர் கலிபா காலமானார்: மோடி இரங்கல்

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னராக கடந்த 1995 முதல் 2013 வரை 18 ஆண்டுகள் பதவி வகித்தவர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி. எரிசக்தி வளம்மிக்க கத்தாரின் தந்தை என போற்றப்படும் இவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் உலகளவில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றது. இவரது ஆட்சிக்காலத்தில் தான் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் உரிமை பெற்றனர்.

அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தின் நிறுவனருமான கலிபா அல்தானி கடந்த 2013ல் பதவி விலகி தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இந்நிலையில், முன்னாள் மன்னர் கலிபா நேற்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: