- டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை
- மயிலாப்பூர், ராயப்பேட்டை
- சென்னை
- மயிலாப்பூர்
- ராயப்பேட்டை
- மயிலாப்பூர் லூஸ் சந்திப்பு…
சென்னை: மெட்ரோ ரயில் பணிக்கு வந்த ராட்சத கிரேன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பழுதாகி நின்றது. இதனால் மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் சுரங்கப்பணி மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நடந்து வருகிறது. இதற்கான மெரினா காமராஜர் சாலையில் இருந்து ராட்சத கிரேன் ஒன்று மயிலாப்பூர் பகுதிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் கிரேன் பழுதாகி நடுச்சாலையில் நின்றது. ராட்சத கிரேன் என்பதால் சாலை முழுவதும் போக்குவரத்து செல்ல முடியாதபடி தடைப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிக்னலில் ஒரு வழிப்பாதையை இருவழி பாதைகளாக போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இருந்தாலும் இன்று காலையில் அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த போக்குவரத்து நெரிசலால் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் பழுதான ராட்சத கிரேனை மெட்ரோ ரயில் பணி பொறியார்கள் சம்பவ இடத்திற்கு வந்து பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
