மதுரை, ஜூலை 10: பழங்காநத்தம் மேம்பாலத்தில் டெலினேட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை – திண்டுக்கல் சாலையில் போடி ரயில்வே லைன் மீது 1961ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு பாலம் கட்டப்பட்டது. இருவழிச்சாலையாக கட்டப்பட்ட இப்பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக, நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் வரையிலான வாகனங்கள் சென்று வருகின்றன.
