×

கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோவை மாவட்ட மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 15ஆம் தேதி வரை தமிழகத்தை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : Kowai, Neelgiri district ,Meteorological Survey Centre ,Chennai ,Goa district ,Nilgiri district ,Meteorological Centre ,Kowai ,Nilgiri ,
× RELATED ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற...