பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா..? தவெக அரசுக்கு கேள்வி

தருமபுரி: தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த ஷீலா (22) என்ற இளம் பெண்ணை, சின்னசாமி (31) என்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுமக்கள் பலர் இருந்த சூழலில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சின்னசாமி கடந்த 7 ஆண்டுகளாக ஷீலாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். சின்னசாமியின் கஞ்சா மற்றும் மதுப் பழக்கங்கள் காரணமாக ஷீலா அவரைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டி கண்டனங்களை பதிவு செய்து வருகிறனனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி, இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி மற்றும் கணடனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், “தருமபுரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பேருந்து நிலையத்திற்குள், இளம்பெண்ணொருவர் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories: