அலங்காநல்லூர் அருகே தீப்பற்றி எரிந்த இ சேவை மையம்: ரூ.6 லட்சம் பொருட்கள் நாசம்

 

அலங்காநல்லூர், ஜூலை 8: அலங்காநல்லூர் அருகே இ சேவை மையம் தீப்பற்றி எரிந்ததில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. அலங்காநல்லூர் அருகே குமாரம் பிரிவில், அரசு அங்கீகாரம் பெற்ற இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர் நல வாரியம், ஆதார் சேவைகள் உள்ளிட்ட இணையதள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலையில் இ சேவை மைய கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் இ சேவை மையத்தில் இருந்த லேப் டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் இணையதள ஆவணங்கள் உட்பட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. போலீசார் விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என ெதரியவருகிறது. இந்த கட்டிடத்தில் தமிழ்நாடு பாரத ரத்னா தொழிலாளர் சங்கமும் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பல்வேறு ஆவணங்களும் தீயில் எரிந்து வீணாகிப்போனதாக தெரிகிறது.

Related Stories: