கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

 

கரூர், ஜூலை 8: கரூர்- திருச்சி பைபாஸ் சாலை மூலக்காட்டனுார் பிரிவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வதை பார்வையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் தி ருச்சி பைபாஸ் சாலை மூலக்காட்டனுார் பிரிவு அருகே சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. தற்போதைய நிலையில், அதிகளவு காற்று வீசினாலும், வெயிலும் அதற்கு நிகராக வாட்டி வதக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீரின் தேவை அ திகமாக உள்ளது.

இந்நிலையில் மூலக்காட்டனுார் பிரிவுஅருகே தண்ணீர் வீணாகி செல்வதை பார்வையிட்டு செல்லும் அனைவரும் மனதளவில் வருந்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் நேரில் பார்வையிட்டு 2 வாரங்களுக்கும் மேலாக தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்திட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேறகொள்ள வேண்டும் என அனைவ ரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: