கரூர், ஜூலை 6: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக செல்லும் பாசன வாய்க்கால துார்வாரிட தேவையான ஏற்பாடுகளை ‘மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக பாசன வாய்க்கால் குடியிருப்பு பகுதிகளின் வழியாக சென்று பிரதான வாய்க்காலுடன் கலக்கிறது. குடியிருப்புகளின் வழியாக செல்லும் இந்த வாய்க்காலில் அதிகளவு செடி கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும், இந்த வாய்க்காலில் விஷ ஐந்துகளின் நடமாட்டமும் அதிகளவு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்துடன் வசித்து வரும் நிலையில் உள்ளனர். எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு செடி கொடிகளை அகற்றி துாய்மையாக பராமரிக்க வேண்டு்ம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த வாய்க்காலை துாய்மையாக பராமரிக்க விரைந்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
