பெரம்பலூர், ஜூன் 30: பெரம்பலூரில் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி வலியுறுத்தியும் இ.கம்யூ. சார்பாக ஆர்ப்பாட்டம் மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் புது பஸ்டாண்ட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சியின் மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், ராஜாங்கம் மற்றும் கட்சியின் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் 40 பெண்கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.
