×

கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கம் ரத்து: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒட்டுண்ணி, கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டு பேசியதைத் தொடர்ந்து, கடந்த மே 15ம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி குழு சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது. ஏராளமான இளைஞர்கள் இதில் இணைந்த நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த மே 21ம் தேதி கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் முடக்க உத்தரவை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா நேற்று தீர்ப்பளித்தார். முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கடந்த ஜூன் 21ம் தேதி நடைபெற இருந்த நீட் மறுதேர்வுக்கு முன்பாக மாணவர்கள், பெற்றோர்களிடையே குழப்பத்தை தவிர்க்கவே கரப்பான் பூச்சி கட்சியின் சமூக ஊடக கணக்கு முடக்கப்பட்டது’’ என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி சர்மா, ‘‘நீட் தேர்வு முடிந்து விட்டதால், இனி எந்த பிரச்னையும் இல்லை. எனவே, முடக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ எனக்கூறி கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் கணக்கு மீண்டும் செயல்பட அனுமதி வழங்கினார்.

Tags : COCKROACH PARTY ,DELHI ,New Delhi ,Cockroach Janata Party ,Supreme Court ,Chief Justice ,Suryakant ,
× RELATED கேரளத்தில் தொடர் மழை வயநாட்டில்...